திருப்பூரில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்
திருப்பூரில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்,
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தைப் பாதுகாக்கவும், ஊழியர்களை கட்டாயப்படுத்தி விருப்ப ஓய்வுத் திட்டத்தில் வெளியேற்ற முயல்வதை எதிர்த்தும், 4 ஜி சேவை வழங்கவும் வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் பி.எஸ்.என்.எல்.இ.யு. உள்பட 6 தொழிற்சங்கத்தினர் திருப்பூர் மெயின்ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் நேற்று ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இந்த போராட்டத்துக்கு பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கக் கிளைத் தலைவர்கள் உண்ணிகிருஷ்ணன், ரவிச்சந்திரன், சங்கிலிதுரை ஆகியோர் தலைமை தாங்கி பேசினாார்கள். மாவட்டத் தலைவர் முகமது ஜாபர், ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் சவுந்தரபாண்டியன், பி.எஸ்.என்.எல். சங்கத்தின் மாநில உதவி செயலாளர் எஸ்.சுப்பிரமணியன், மாவட்ட நிர்வாகிகள் காந்தி, விஸ்வநாதன், கல்யாணராமன், கிளைச் செயலாளர்கள் குமரவேல், வின்சென்ட், தங்கராஜ், ஒப்பந்த ஊழியர் சங்க நிர்வாகி ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர். இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story