கன்னியாகுமரியில் அரசியல் சட்ட தின உறுதிமொழி ஏற்பு - கலெக்டர் பிரசாந்த் வடநேரே பங்கேற்பு


கன்னியாகுமரியில் அரசியல் சட்ட தின உறுதிமொழி ஏற்பு - கலெக்டர் பிரசாந்த் வடநேரே பங்கேற்பு
x
தினத்தந்தி 27 Nov 2019 4:15 AM IST (Updated: 27 Nov 2019 3:47 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் அரசியல் சட்ட தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே பங்கேற்றார்.

கன்னியாகுமரி,

இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட நாளை முன்னிட்டு அரசு அலுவலர்கள் அரசியல் சட்ட தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக வளாகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார். நாகர்கோவில் உதவி கலெக்டர் மயில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகன்யா, உதவி இயக்குநர்கள் கண்ணன் (பேரூராட்சிகள்) சையதுசுலைமான் (ஊராட்சிகள்), கன்னியாகுமரி பேரூராட்சி செயல்அலுவலர் சத்தியதாஸ், பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story