தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம்


தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 28 Nov 2019 3:45 AM IST (Updated: 28 Nov 2019 12:39 AM IST)
t-max-icont-min-icon

வீட்டுமனை பட்டா மற்றும் வீட்டுமனை வழங்கிடகோரி தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள வழுதிலம்பேடு, செதில்பாக்கம், அரியத்துறை, மாதர்பாக்கம், மேல்முதலம்பேடு நத்தம் ஊராட்சிகளை சேர்ந்த கிராமங்களில் பல ஆண்டுகளாக வசித்து வரும் மக்கள் தங்களுக்கு வீட்டுமனை பட்டாவும், வீட்டு மனையும் வழங்கக்கோரி வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இது தொடர்பான கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகா அலுவலகம் முன்பு நேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துளசிநாராயணன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட குழு உறுப்பினர் சிவகுமார், மாவட்ட தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த போராட்டத்தில் மேற்கண்ட ஊராட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் தங்களுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் வீட்டுமனை வழங்கிடகோரி தாசில்தார் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் ஒட்டுமொத்தமாக மனு அளித்தனர்.

Next Story