மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர், ராணிப்பேட்டை புதிய மாவட்டங்கள் இன்று உதயம் - முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார் + "||" + New districts of Thiruppathur and Ranipettai dawn today The inauguration of the first-minister Edappadi Palanisamy

திருப்பத்தூர், ராணிப்பேட்டை புதிய மாவட்டங்கள் இன்று உதயம் - முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்

திருப்பத்தூர், ராணிப்பேட்டை புதிய மாவட்டங்கள் இன்று உதயம் - முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் இன்று (வியாழக்கிழமை) உதயமாகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய மாவட்டங்களை தொடங்கிவைக்கிறார்.
வேலூர், 

வேலூர் மாவட்டத்தை 3-ஆக பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 2 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்டம் 1797.92 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், 11 லட்சத்து 11 ஆயிரத்து 812 மக்கள் தொகையை கொண்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் 2234.32 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 12 லட்சத்து 10 ஆயிரத்து 277 மக்கள் தொகையை கொண்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் வருவாய் கோட்டமும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆம்பூர் வருவாய் கோட்டமும் உள்ளது. திருப்பத்தூர், நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய தாலுகாக்களும் அடங்கி உள்ளன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை வருவாய் கோட்டமும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அரக்கோணம் வருவாய் கோட்டமும் உள்ளது. ஆற்காடு, வாலாஜா, அரக்கோணம், நெமிலி ஆகிய தாலுகாக்களும் அடங்கி உள்ளன.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 15 பிர்க்காக்கள், 195 வருவாய் கிராமங்கள், 207 கிராம ஊராட்சிகளும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 18 பிர்க்காக்கள், 330 வருவாய் கிராமங்கள், 288 கிராம ஊராட்சிகளும் உள்ளன.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்டம் 35-வது மாவட்டமாகவும், ராணிப்பேட்டை மாவட்டம் 36-வது மாவட்டமாகவும் இன்று (வியாழக்கிழமை) உதயமாகிறது. திருப்பத்தூர் மாவட்ட தொடக்கவிழா திருப்பத்தூரில் உள்ள டான்பாஸ்கோ மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் காலை 11 மணிக்கு நடக்கிறது.

ராணிப்பேட்டை மாவட்ட தொடக்கவிழா ராணிப்பேட்டை கால்நடை நோய்தடுப்பு மருந்து நிலைய வளாகத்தில் பகல் 12 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்குகிறார். அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.சி.வீரமணி, நிலோபர்கபில் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். தலைமை செயலாளர் க.சண்முகம் வரவேற்று பேசுகிறார்.

விழாவில் முதல்-அமைச்சர் எடிப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டு புதிய மாவட்டங்களை தொடங்கிவைக்கிறார். மேலும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிக்கப்பட்ட திட்டங்களை தொடங்கிவைக்கிறார். ரூ.184 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசுகிறார்.

புதிய மாவட்டங்கள் தொடக்கவிழாவுக்காக திருப்பத்தூர், ராணிப்பேட்டையில் பிரம்மாண்ட மேடைகளும், பந்தல்களும் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜ் தலைமையில், வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி மேற்பார்வையில், போலீஸ் சூப்பிரண்டுகள் பிரவேஷ்குமார், விஜயக்குமார், மயில்வாகனன் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். மொத்தம் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முதல்-அமைச்சர் வருகையை யொட்டி திருப்பத்தூர், ராணிப்பேட்டை நகரங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறப்பு மக்கள் குறைதீர்வு முகாமில் 9,756 மனுக்கள் பெறப்பட்டன - கலெக்டர் சிவன்அருள் தகவல்
திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறப்பு மக்கள் குறைதீர்வு முகாமில் 9,756 மனுக்கள் பெறப்பட்டதாக கலெக்டர் சிவன்அருள் தெரிவித்துள்ளார்.
2. திருப்பத்தூர் மாவட்டத்தில் 298 பள்ளிகளில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு - கலெக்டர் சிவன்அருள் தகவல்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 298 பள்ளிகளில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படும், என கலெக்டர் சிவன்அருள் தெரிவித்துள்ளார்.
3. திருப்பத்தூர் மாவட்டத்தில் 19 நாட்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் குறைந்த அளவு வினியோகம் - கலெக்டர் தகவல்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 19 நாட்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் குறைந்த அளவு வினியோகிக்கப்படும். என்று சிவன்அருள் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறிருப்பதாவது:-
4. திருப்பத்தூர் நகர அ.தி.மு.க. சார்பில் 1,000 பேருக்கு மளிகை பொருட்கள் - அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்
திருப்பத்தூர் நகர அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் கே.சி.வீரமணி 1,000 பேருக்கு மளிகை பொருட்கள் வழங்கினார்.
5. திருப்பத்தூர் மாவட்டத்துக்கு புதிய திட்ட அலுவலரை தமிழக அரசு விரைவில் நியமிக்கும் - கலெக்டர் சிவன்அருள் தகவல்
திருப்பத்தூர் மாவட்டத்துக்கு புதிய திட்ட அலுவலரை தமிழக அரசு விரைவில் நியமிக்கும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.