நிலுவைத்தொகையை வழங்க கோரி அரசு பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டம்
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சேலம் மண்டலம் சார்பில் சேலம் நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
சேலம்,
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சேலம் மண்டலம் சார்பில் சேலம் நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில பிரசார செயலாளர் சுகமதி தலைமை தாங்கினார். முன்னாள் மாநில துணைத்தலைவர் கிருஷ்ணன், தேசிய குழு உறுப்பினர் பெரியசாமி, மாநில செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கம் அளித்து பேசினார். இதில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் விவரம் வருமாறு:- 8-வது ஊதியக்குழு நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையாக அனைத்து படி மற்றும் போனஸ் வழங்க வேண்டும். ஊராட்சி களப்பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணியாளர்கள், டாஸ்மாக் பணியாளர்கள், அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும்.
ஓய்வூதியம் வழங்கப்படாத அனைத்து நிலை அரசு பணியாளர்களுக்கும் குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். ஊதியக்குழு முரண்பாடுகளை நீக்க வேண்டும். பொது வினியோகத்திட்டத்திற்கு தனித்துறை உருவாக்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகள் வைத்தனர். இதில் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.

Related Tags :
Next Story