உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் இன்று மும்பை வருகை


உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் இன்று மும்பை வருகை
x
தினத்தந்தி 28 Nov 2019 5:10 AM IST (Updated: 28 Nov 2019 5:10 AM IST)
t-max-icont-min-icon

இன்று நடைபெறும் உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். மறைந்த தேவதாசன் உருவப்படத்துக்கும் அஞ்சலி செலுத்துகிறார்.

மும்பை, 

மும்பை தாதர் சிவாஜிபார்க் மைதானத்தில் இன்று(வியாழக்கிழமை) சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியேற்பு விழா நடக்கிறது. இதில், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக பதவி ஏற்கிறார்.

இந்த விழாவில் கலந்துகொள்ள வருமாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இந்த அழைப்பை ஏற்று மு.க.ஸ்டாலின் இன்று மும்பை வருகிறார். காலை 10.30 மணிக்கு சாந்தாகுருஸ் விமான நிலையத்தில் வந்திறங்கும் அவருக்கு தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளனர்.

இதன் பின்னர் மறைந்த மும்பை புறநகர் தி.மு.க. அவைத்தலைவர் தேவதாசன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துகிறார்.

அதைத்தொடர்ந்து தாதர் சிவாஜிபார்க்கில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

இதனால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை வரவேற்க கழகத்தோழர்கள், மும்பை தமிழ் அன்பர்கள் திரண்டு வரும்படி மும்பை புறநகர் தி.மு.க செயலாளர் அலிசேக் மீரான் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

Next Story