மாவட்ட செய்திகள்

வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.3 கோடி கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது + "||" + Three suspects arrested for trying to smuggle Sri Lanka out of Vedaranyam

வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.3 கோடி கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது

வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.3 கோடி கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது
வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.3 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கடல் மார்க்கமாக செல்வது மிகவும் எளிதானது. இலங்கையில் இருந்து தமிழக பகுதிகளுக்கும், தமிழக பகுதிகளில் இருந்து இலங்கைக்கும் கடல் மார்க்கமாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களும், தங்கமும் கடத்தி செல்லப்படுவது அடிக்கடி நடக்கிறது.


இதை தடுக்கும் விதமாக ‘கியூ’ பிரிவு போலீசாரும், கடலோர பாதுகாப்புக்குழும போலீசாரும் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ரகசிய தகவல்

இந்த நிலையில் திருச்சியில் இருந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள வடுவூர் வழியாக வேதாரண்யத்துக்கு கஞ்சா கடத்தப்படுவதாக ‘கியூ’ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று அதிகாலை வடுவூர் சோதனை சாவடியில் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசங்கரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் அருண்பிரசாத் உள்ளிட்ட ‘கியூ’ பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு சுற்றுலா வேன் வந்து கொண்டிருந்தது. அதை வழிமறித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் வேனில் மூட்டை மூட்டையாக கஞ்சா கடத்தி செல்லப்படுவது தெரியவந்தது.

ரூ.3 கோடி கஞ்சா

இதைத்தொடர்ந்து வேனில் இருந்த 3 பேரையும் கைது செய்த போலீசார், கஞ்சா மூட்டைகள் மற்றும் வேனை பறிமுதல் செய்து நாகை ‘கியூ’ பிரிவு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கோயம்புத்தூரை சேர்ந்த சரவணன் (வயது33), செந்தில்குமார் (33), மதுரையை சேர்ந்த அரிவேந்திரன் (28) ஆகியோர் என்பதும், இவர்கள் 3 பேரும் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கொண்டு வந்து வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தி செல்ல முயற்சி மேற்கொண்டது தெரியவந்தது.

சோதனையில் கைப்பற்றப்பட்ட கஞ்சா மொத்தம் 700 கிலோ இருந்தது. இதன் மதிப்பு ரூ.3 கோடி என கூறப்படுகிறது. கஞ்சா கொண்டு செல்லப்பட்ட வேனுக்கு முன்பாக ஒரு காரில் கடத்தல் கும்பல் வழிகாட்டி சென்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த கும்பலை சேர்ந்தவர்கள் யார்? என்பது குறித்து போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம்: தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது
குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் தலைமறைவாக இருந்த சிவராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2. துக்ளக் ஆசிரியர் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீச முயற்சி; 4 பேர் கைது
துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீச முயற்சித்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது
கோவையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி போலீசாரால் இன்று காலை கைது செய்யப்பட்டு உள்ளார்.
4. தொழிலாளர்களின் வருங்கால வைப்புநிதியில், ரூ.1½ லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன அதிகாரி கைது
தொழிலாளர்களின் வருங்கால வைப்புநிதியில் இருந்து ரூ 1½ லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன அதிகாரியை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
5. ரூ.5 லட்சம் கேட்டு தொழில் அதிபரை மிரட்டிய வழக்கு: ஓராண்டுக்கு பிறகு மேலும் 2 பேர் கைது
ரூ.5 லட்சம் கேட்டு தொழில் அதிபரை மிரட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த 2 பேர் ஓராண்டுக்கு பிறகு கைது செய்யப்பட்டனர்.