மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலையில் கழுத்தை இறுக்கி புதுமாப்பிள்ளை கொலை + "||" + In Thiruvannamalai Tighten the neck New groom killed

திருவண்ணாமலையில் கழுத்தை இறுக்கி புதுமாப்பிள்ளை கொலை

திருவண்ணாமலையில் கழுத்தை இறுக்கி புதுமாப்பிள்ளை கொலை
திருவண்ணாமலையில் கழுத்தை இறுக்கி புதுமாப்பிள்ளை கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை தாலுகா அரடாப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வடிவேல். அவருடைய மகன் உதயசூரியன் (வயது 30), வேலூர் ரோட்டில் மருந்துக்கடை வைத்து உள்ளார். அவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு திருமணமாகி ஒரு மாதம் ஆகிறது. உதயசூரியனுக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திருக்கோவிலூர் ரோடு எடப்பாளையம் ஏரிக்கரையில் உதயசூரியன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மேலும் அவருடைய கழுத்தை துணியால் இறுக்கி கொல்லப்பட்டதற்கான அடையாளம் இருந்து உள்ளது.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் திருவண்ணாமலை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
ஐதராபாத்தில் பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 பேர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
2. டெல்லி அருகே மகன், மகளை கொன்று விட்டு தம்பதி தற்கொலை
டெல்லி அருகே மகன், மகளை கொன்று விட்டு, தம்பதி 8-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
3. மனைவி, மகள்கள் உள்பட குடும்பத்தில் 5 பேரை கொலை செய்த கொடூரன்
ஜார்கண்ட் மாநிலத்தில் கொடூரன் ஒருவன் தனது மனைவி, மகள்கள் உள்பட குடும்பத்தில் உள்ள 5 பேர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
4. தஞ்சை அருகே நடந்த ரவுடி கொலை வழக்கில் 9 பேர் கைது
தஞ்சை அருகே நடந்த ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. வாலாஜா அருகே அழுத குழந்தை துப்பட்டாவால் அமுக்கி கொலை தாய் கைது
குழந்தையின்அழுகையை நிறுத்த முகத்தில் துப்பட்டாவால் தாயார் அமுக்கியபோது மூச்சுத்திணறி குழந்தை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் தாயை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.