மாவட்ட செய்திகள்

திருமருகல் அருகே நகைக்கடை உரிமையாளர் மர்ம சாவு கொலையா? போலீசார் விசாரணை + "||" + Mysterious death of jewelery owner near Tirumala Police are investigating

திருமருகல் அருகே நகைக்கடை உரிமையாளர் மர்ம சாவு கொலையா? போலீசார் விசாரணை

திருமருகல் அருகே நகைக்கடை உரிமையாளர் மர்ம சாவு கொலையா? போலீசார் விசாரணை
திருமருகல் அருகே நகைக்கடை உரிமையாளர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரை யாரேனும் கொலை செய்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமருகல்,

நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள திருப்புகலூர் மெயின் சாலையில் கொய்யாத்தோப்பு என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் காயத்துடன் இறந்து கிடப்பதாக திட்டச்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.


விசாரணையில், இறந்தவர் மயிலாடுதுறை ஓ.எஸ்.எம். நகரை சேர்ந்த ரிக்கப்சந்த் மகன் ஜித்தேந்திரகுமார்(வயது 34) என்பதும், இவர் திருமருகல் சந்தைப்பேட்டையில் நகைக்கடை மற்றும் நகை அடகு கடை வைத்து நடத்தி வந்ததும் தெரிய வந்தது.

பொருட்கள் மாயம்

இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் திருமருகலில் உள்ள தனது நகைக்கடை மற்றும் அடகு கடையை பூட்டி விட்டு மோட்டார் சைக்கிளில் மயிலாடுதுறையில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது என போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து இறந்து கிடந்த ஜித்தேந்திரகுமாரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் இறந்து கிடந்த இடத்தில் அவரது கடை சாவி, பணப்பை, கழுத்தில் அணிந்திருந்த நகை ஆகிய எந்த பொருட்களும் இல்லை.

சாவில் மர்மம்.

ஜித்தேந்திரகுமாரின் சாவில் மர்மம் இருப்பதாக, அவருடைய சித்தப்பா அஜித்குமார் திட்டச்சேரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை யாராவது கொலை செய்தார்களா? அல்லது வாகனம் மோதி இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் சுஷாந்த் சிங் எழுதிய நன்றிகடன் பட்டவர்கள் பட்டியல் சமூகவலைதளத்தில் வெளியிட்ட நடிகை ரியா
நடிகர் சுஷாந்த் சிங் எழுதியதாக கூறப்படும் நன்றிகடன் பட்டவர்கள் பட்டியலை நடிகை ரியா சக்கரபோர்த்தி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
2. வேலூரில் பெண் டாக்டர் மர்மச்சாவு போலீசார் விசாரணை
வேலூரில் பெண் டாக்டர் மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்ட தொழிலாளி சாவு கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை
பணகுடியில் கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்ட தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4. விளையாட செல்போன் கொடுக்காததால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை
விளையாட தனது அண்ணன் செல்போன் கொடுக்காததால் மனமுடைந்த 10-ம் வகுப்பு மாணவி மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5. சுஷாந்த் சிங் வங்கி கணக்கில் பண மோசடி நடிகை ரியாவிடம் அமலாக்கத்துறை விசாரணை
நடிகர் சுஷாந்த் சிங்கின் வங்கி கணக்கில் ரூ.15 கோடி பணம் மோசடி செய்யப்பட்டு இருப்பதாக அவரது தந்தை அளித்த புகார் தொடர்பாக அமலாக்கத்துறை நடிகை ரியா சக்கரபோர்த்தியிடம் விசாரணை நடத்தியது.