5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யக்கோரி அரசு பள்ளி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யக்கோரி அரசு பள்ளி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Dec 2019 11:00 PM GMT (Updated: 5 Dec 2019 7:26 PM GMT)

5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யக்கோரி அய்யம்பேட்டையில் அரசு பள்ளி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அய்யம்பேட்டை,

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும். பள்ளியில் தூய்மையான குடிநீர், சுகாதாரமான கழிவறை வசதி செய்து தர வேண்டும். பிளஸ்-2 வரை படித்து விட்டு மேல்படிப்பை தொடர முடியாமல் உள்ள ஏழை மாணவ-மாணவிகளுக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யம்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நேற்று திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு பள்ளி மாணவர் உபகுழு அமைப்பின் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் சஞ்சீவ் தலைமை தாங்கினார். இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அரவிந்தசாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாவட்ட துணை தலைவர் அருண்குமார் மற்றும் அய்யம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷம் எழுப்பினர்.

பேச்சுவார்த்தை

பள்ளி தலைமை ஆசிரியர் ஜெகதீசன் மற்றும் அய்யம்பேட்டை போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.


Next Story