குமரி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் 14-ந் தேதி நடக்கிறது மாவட்ட நீதிபதி தகவல்


குமரி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் 14-ந் தேதி நடக்கிறது மாவட்ட நீதிபதி தகவல்
x
தினத்தந்தி 8 Dec 2019 4:00 AM IST (Updated: 8 Dec 2019 1:17 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் 14-ந் தேதி நடக்கிறது என்று மாவட்ட நீதிபதி அருள் முருகன் கூறினார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு தலைவரும், மாவட்ட நீதிபதியுமான அருள் முருகன் நேற்று நாகர்கோவிலில் உள்ள சமரச மையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காண மக்கள் நீதிமன்றம் கொண்டு வரப்பட்டது. இதில் சிவில் வழக்குகள், காசோலை மோசடி, வாகன விபத்து, ஜீவனாம்சம், சொத்து பிரச்சினை உள்ளிட்ட வழக்குகள் எடுத்துக்கொள்ளப்படும். இருதரப்பினரிடமும் வழக்கு தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சினைகள் கண்டறியப்பட்டு அந்த வழக்கிற்கு தீர்வு காணப்படுகிறது.

மக்கள் நீதிமன்றம்

கடந்த 2 மாதங்களுக்கு முன் குமரி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 3 ஆயிரத்து 714 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, 1,153 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

அதேபோல் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் 14-ந் தேதி மக்கள் நீதிமன்றம் நடக்கிறது. இதில் 2 ஆயிரத்து 984 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகின்றன.

மேல்முறையீடு கிடையாது

மக்கள் நீதிமன்றத்தால் வழங்கப்படும் தீர்ப்பானது இறுதியானது. இதற்கு மேல்முறையீடு கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, நாகர்கோவில் முதன்மை சார்பு நீதிபதி ராமலிங்கம், மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு செயலாளர் ஜார்ஜ் ராபின்சன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story