நர்சை கடத்தி பாலியல் பலாத்காரம்: லாரி டிரைவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை


நர்சை கடத்தி பாலியல் பலாத்காரம்: லாரி டிரைவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 9 Dec 2019 11:00 PM GMT (Updated: 2019-12-09T23:03:56+05:30)

நர்சை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி மகிளா கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

திருச்சி,

தஞ்சாவூர் மாவட்டம், புதுக்குடியை சேர்ந்தவர் சேகர் மகன் மணிகண்டன் (வயது25). லாரி டிரைவர். இவருக்கு, திருச்சி தில்லைநகர் பகுதியில் விடுதியில் தங்கி இருந்து நர்ஸ் வேலை செய்து வந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. மணிகண்டன் அந்த நர்சை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

சேகரிடம் இருந்து தப்பி வெளியேறிய நர்ஸ் இதுபற்றி ஸ்ரீரங்கம்அனைத்து மகளி்ர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். பின்னர் அவர் மீது திருச்சி மகிளா கோர்ட்டில் சிறார் பாலியல் பலாத்கார சட்டத்தின் (போக்சோ) கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

10 ஆண்டு சிறை தண்டனை

இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டனுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி கே.வனிதா தீர்ப்பு கூறினார்.

போலீசார் தரப்பில் இந்த வழக்கில் அரசு வக்கீல் வெங்கடேசன் ஆஜராகி வாதாடினார்.

Next Story