இலவங்கார்குடி ஊராட்சியில் வார்டு மறுவரையறைக்கு பின்பு தேர்தல் நடத்த வேண்டும் கிராமமக்கள் மனு
இலவங்கார்குடி ஊராட்சியில் வார்டு மறுவரை யறைக்கு பின்பு தேர்தல் நடத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கிராமமக்கள் மனு அளித்தனர்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியத்துக்கு உட்பட்ட இலவங்கார்குடி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி வார்டுகளின் வாக்காளர் பட்டியலில் சில வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளதாகவும், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களின் பெயர்கள் வெவ்வேறு வார்டுகளில் சேர்க்கப்பட்டு குளறுபடியை ஏற்படுத்தி உள்ளது.
வார்டு மறுவரையறைக்கு பின்பு
மேலும் வார்டு பட்டியலில் வாக்காளர் பெயர்கள் தங்கள் பகுதிக்கு இல்லாமல் மற்றொரு பகுதி வார்டில் உள்ளது. இதனால் தங்களுக்கான உறுப்பினரை தேர்வு செய்ய முடியாத நிலை ஏற்படக் கூடும். இந்த காரணத்தினால் வார்டு உறுப்பினர் வெற்றியில் முறைகேடு நடைபெற வாய்ப்பு உள்ளதால் வார்டு மறுவரையறைக்கு பின்பு தங்கள் பகுதிக்கான தேர்தலை நடத்த வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story