சிறுகடம்பூர் ஏரிக்கரையில் சாய்ந்த பழமையான ஆலமரம் மீண்டும் நடப்பட்டது


சிறுகடம்பூர் ஏரிக்கரையில் சாய்ந்த பழமையான ஆலமரம் மீண்டும் நடப்பட்டது
x
தினத்தந்தி 13 Dec 2019 10:00 PM GMT (Updated: 13 Dec 2019 4:23 PM GMT)

சிறுகடம்பூர் ஏரிக்கரையில் சாய்ந்த பழமையான ஆலமரம் மீண்டும் அதே இடத்தில் நடப்பட்டது.

செந்துறை, 

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் ஏரிக்கரையில் 50 ஆண்டுகள் பழமையான ஆலமரம் ஒன்று இருந்தது. இந்நிலையில் அண்மையில் பெய்த கனமழையால் இந்த ஏரி முழு கொள்ளளவை எட்டியது. கரையில் அதிகப்படியான ஈரம் மற்றும் காற்று காரணமாக சில நாட்களுக்கு முன்பு இந்த மரம் ஏரியின் உட்பகுதியில் சாய்ந்தது. இதுகுறித்து தகவலறிந்த செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவாஜி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும் இதனை அறிந்த அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா ஏரிக்கரையில், சாய்ந்த ஆலமரத்தை பொக்லைன் எந்திரத்தை கொண்டு அதே இடத்தில் மீண்டும் நட்டு வைக்க உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் செந்தில்தம்பி மேற்பார்வையில், சாலை ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் மரத்தின் கிளைகளை வெட்டி எடுத்து விட்டு, பொக்லைன் எந்திரத்தின் மூலம் அதே இடத்தில் பள்ளம் தோண்டி, மீண்டும் அந்த மரத்தை நட்டனர். தொடர்ந்து அந்த மரத்திற்கு தண்ணீர் ஊற்றி பாராமரிக்கப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலைத் துறையினரின் இந்த புதிய முயற்சி அரியலூர் மாவட்டத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Next Story