மாவட்ட செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் பணியாளர்கள் 8,400 பேருக்கு பயிற்சி அரியலூர் கலெக்டர் ரத்னா தகவல் + "||" + Ariyalur Collector Ratna informs 8,400 local election workers

உள்ளாட்சி தேர்தல் பணியாளர்கள் 8,400 பேருக்கு பயிற்சி அரியலூர் கலெக்டர் ரத்னா தகவல்

உள்ளாட்சி தேர்தல் பணியாளர்கள் 8,400 பேருக்கு பயிற்சி அரியலூர் கலெக்டர் ரத்னா தகவல்
அரியலூர் மாவட்ட உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள 8,400 பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று கலெக்டர் ரத்னா தெரிவித்தார்.
அரியலூர்,

அரியலூர் மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை கணினி மூலம் சுழற்சி முறையில் தேர்ந்தெடுத்து ஒதுக்கீடு செய்யும் பணி, கலெக்டர் அலுவலகத்திலுள்ள தேசிய தகவலியல் மையத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ரத்னா தலைமை தாங்கி பேசியதாவது:-


அரியலூர் மாவட்ட உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள பணியாளர்களை கணினி மூலம் சுழற்சி முறையில் தேர்ந்தெடுத்து ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது. மேலும், இந்த பணியாளர்களுக்கு நாளை(இன்று)வாக்குப்பதிவு தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.

திருமானூர்

அரியலூர் ஒன்றியத்திற்கு அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், திருமானூர் ஒன்றியத்திற்கு கீழப்பழுவூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியிலும், செந்துறை ஒன்றியத்திற்கு செந்துறை அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளியிலும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்கு ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக்குலேசன் பள்ளியிலும், ஆண்டிமடம் ஒன்றியத்திற்கு மகிமைபுரம் மாடர்ன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் மற்றும் தா.பழூர் ஒன்றியத்திற்கு ஜெ.தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பான பயிற்சி மண்டல அலுவலர்களைக் கொண்டு வழங்கப்படவுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, திட்ட இயக்குனர்கள் சுந்தர்ராஜன் (ஊரக வளர்ச்சி முகமை), ஜெயராமன் (மகளிர் திட்டம்), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிசாமி, தேசிய தகவலியல் அலுவலர்கள் ஜான்பிரிட்டோ, டேவிட் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருப்பத்தூர் மாவட்டத்தில் கறவை மாடுகள், ஆடுகள், கோழிகள் பெற விண்ணப்பிக்கலாம் கால்நடை உதவி இயக்குனர் தகவல்
திருப்பத்தூர் மாவட்டத்தில் கறவை மாடுகள், ஆடுகள், கோழிகள் பெற விண்ணப்பிக்கலாம் என கால்நடை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
2. மழையால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்க நீலகிரியில் 280 நிவாரண முகாம்கள் தயார் கலெக்டர் தகவல்
நீலகிரியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்க 280 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன என்று கலெக்டர் தெரிவித்தார்.
3. வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள 33 நிவாரண குழுக்கள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்
பருவமழையை எதிர்கொள்ள மதுரை மாவட்டத்தில் 33 நிவாரண குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
4. அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் திண்டுக்கல்லில் கலெக்டர் ஆய்வு
அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்தில் நடந்த கூட்டத்தை கலெக்டர் விஜயலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
5. கந்துவட்டி கொடுமையால் மனைவி, மகனுடன் விவசாயி தீக்குளிக்க முயற்சி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
கந்துவட்டி கொடுமையால் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மனைவி, மகனுடன் விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.