தேர்தல் வெளிப்படையாக நடப்பதை உறுதி செய்ய ஒன்றிய அளவில் அமைக்கப்பட்ட குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமனம் - கலெக்டர் உத்தரவு
தேர்தல் வெளிப்படையாக நடப்பதை உறுதிசெய்ய ஒன்றிய அளவில் அமைக்கப்பட்ட நடத்தை விதிகள் அமலாக்கக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமனம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.
தேனி,
தேனி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பதவிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல் வெளிப்படையாக நடப்பதை உறுதி செய்வதற்கு ஊராட்சி ஒன்றிய அளவில் தேர்தல் நடத்தை விதிகள் அமலாக்கக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.
ஊராட்சி ஒன்றியத்துக்கு ஒரு குழு வீதம் மாவட்டத்தில் மொத்தம் 8 குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழுவிற்கான உறுப்பினர்களை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான பல்லவி பல்தேவ் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அளவிலான குழுவின் உறுப்பினர்களாக தேனி நான்கு வழிச்சாலைகள் நில எடுப்பு தனி தாசில்தார் நஜிமுனிஷா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (தணிக்கை) வாசுதேவன், கடமலை-மயிலை ஒன்றிய அளவிலான குழுவுக்கு ஆண்டிப்பட்டி நெடுஞ்சாலைத்துறை தனி தாசில்தார் ராணி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (வளர்ச்சி பிரிவு) வினோத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பெரியகுளம் ஒன்றியத்துக்கு ஆண்டிப்பட்டி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் குணசேகரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதரன், தேனி ஒன்றியத்துக்கு கலால் துறை மேற்பார்வை அலுவலர் சேகர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (தணிக்கை) ஜெயபிரகாஷ், போடி ஒன்றியத்துக்கு தேனி நான்கு வழிச்சாலை நிலம் எடுப்பு தாசில்தார் செந்தில்முருகன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாரியப்பன் ஆகியோர் உறுப்பினர் களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சின்னமனூர் ஒன்றியத்துக்கு நான்கு வழிச்சாலை நிலம் எடுப்பு தாசில்தார் முருகேசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன், உத்தமபாளையம் ஒன்றியத்துக்கு தேனி நெடுஞ்சாலைத்துறை தனி தாசில்தார் கிருஷ்ணகுமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கேசவன், கம்பம் ஒன்றியத்துக்கு சின்னமனூர் நகர நிலவரி அலுவலர் அழகுமணி, வளர்ச்சி பிரிவு தலைமை உதவியாளர் சிவக்குமார் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் இந்த ஒவ்வொரு குழுவுக்கும் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக புகார்கள் வரும் இடங்களுக்கு இந்த குழுவினர் உடனுக்குடன் சென்று நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story