மாவட்ட செய்திகள்

மேட்டூர் அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி + "||" + Male elephant trapped in electrification near Mettur

மேட்டூர் அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி

மேட்டூர் அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி
மேட்டூர் அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலியானது.
கொளத்தூர்,

சேலம் மாவட்டம், மேட்டூர் வனச்சரகம் கொளத்தூரை அடுத்த பெரிய தண்டா கிமியான் காடு பகுதியை சேர்ந்தவர் தங்கவேலு, விவசாயி. தமிழக-கர்நாடக மாநில வனப்பகுதியை ஒட்டியுள்ள இவரது தோட்டத்தில் மக்காச்சோளம் பயரிட்டுள்ளார்.


அதே நேரத்தில் மக்காச்சோளப்பயிரை வன விலங்குகள் சேதப்படுத்துவதை தடுக்கும் பொருட்டு, தனது தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று தீவனத்திற்காக மக்காச்சோளம் பயிரிட்ட தோட்டத்திற்கு வந்தது. அப்போது அங்கிருந்த மின் வேலியில் சிக்கி பரிதாபமாக உயிர் இழந்தது.

அடக்கம் செய்தனர்

இது குறித்து தகவல் அறிந்த மேட்டூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து போன யானையை பொக்லைன் எந்திரம் மூலம் மீட்டு சம்பவ இடத்திலேயே கால்நடை டாக்டர் மூலம் பிரேத பரிசோதனை நடத்தி அடக்கம் செய்தனர்.

மின்வேலி அமைத்த தங்கவேலுவிடம் வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவுக்கு 2 மகன்கள் பலி: மனவேதனையில் தாயும் சாவு செவ்வாய்பேட்டையில் வியாபாரிகள் கடை அடைப்பு
சேலம் செவ்வாய்பேட்டையில் கொரோனாவுக்கு 2 மகன்கள் பலியான நிலையில் மனவேதனை அடைந்த தாயும் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையொட்டி செவ்வாய்பேட்டையில் வியாபாரிகள் கடைகளை அடைத்தனர்.
2. கரூர் அருகே விபத்து: அறிவிப்பு பலகை தூண் மீது கார் மோதி புதுமண தம்பதி பலி
கரூர் அருகே சாலையோர அறிவிப்பு பலகை தூண் மீது கார் மோதி புதுமண தம்பதி பலியானார்கள்.
3. தஞ்சை, நாகையில் கொரோனாவுக்கு மேலும் 6 பேர் பலி டெல்டாவில் 331 பேருக்கு தொற்று
தஞ்சை, நாகையில் கொரோனாவுக்கு மேலும் 6 பேர் பலியானார்கள். டெல்டாவில் 331 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
4. ராஜஸ்தானில் முன்னாள் மந்திரி கொரோனாவுக்கு பலி
ராஜஸ்தானில் முன்னாள் மந்திரி கொரோனாவுக்கு பலியானார்.
5. மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: காகித ஆலை ஒப்பந்த தொழிலாளி பலி
வேலாயுதம்பாளையம் அருகே தந்தைக்கு சாப்பாடு கொடுக்க மோட்டார் சைக்கிளில் சென்ற காகித ஆலை ஒப்பந்த தொழிலாளி கார் மோதி பரிதாபமாக இறந்தார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை