தேர்தலை புறக்கணிப்பதாக கூறி கிராமமக்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
கோட்டூர் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமமக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக கூறி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோட்டூர்,
கோட்டூர் அருகே உள்ள திருக்களார் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று அப்பகுதி மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சி மன்ற தேர்தலை புறக்கணிப்பதாக கூறி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் கோட்டூர் ஒன்றிய செயலாளர் சந்திரகுமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் திருக்களார் கூட்டுறவு சங்கத்தில் 2018-19-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகையில் நடந்த முறைகேடு மற்றும் பண மோசடியை கண்டிப்பது. திருக்களார் கிராமத்திற்கு கிடைக்கப்பெற்ற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நிலம் வழங்காமல் இழுத்தடிக்கும் கிராம செயலாளரை கண்டிப்பது.
கோஷங்கள்
திருக்களார் கிராமத்தில் இயங்கி வரும் அரசு பள்ளிக்கு குடிநீர் வசதி செய்து தர வேண்டும். திருக்களார் போலீஸ் நிலையத்திற்கு செல்லும் சாலையை சீரமைத்து தர வேண்டும். 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு உடனடியாக ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Related Tags :
Next Story