நாகர்கோவிலில் கோவில் உண்டியல் பணம் கொள்ளை


நாகர்கோவிலில் கோவில் உண்டியல் பணம் கொள்ளை
x
தினத்தந்தி 16 Dec 2019 4:30 AM IST (Updated: 16 Dec 2019 2:06 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் கோவில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் கோதை கிராமம் சபரி அணை அருகே முத்துபேச்சியம்மன் கோவில் உள்ளது. இங்கு தினமும் காலையிலும், மாலையிலும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதே போல நேற்று காலை பூஜை செய்வதற்காக பூசாரி மனோகரன் கோவிலுக்கு சென்றார். அப்போது கோவில் முன் இருந்த உண்டியலை காணவில்லை. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மனோகரன் உடனே கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் இதுபற்றி வடசேரி போலீசுக்கும் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது கோவிலுக்குள் இரவில் புகுந்த மர்மநபர்கள் உண்டியலை கோவிலுக்கு வெளியே தூக்கி சென்று அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து விட்டு, வீசி சென்றது தெரிய வந்தது. இந்த கொள்ளையில் ஈடுபட்டது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story