குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆத்தூரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆத்தூரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Dec 2019 4:00 AM IST (Updated: 18 Dec 2019 2:21 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆத்தூரில் அனிதா ராதாகிரு‌‌ஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆறுமுகநேரி, 

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த சட்ட திருத்தத்தை வாபஸ் பெற வலியுறுத்தியும், தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், ஆத்தூர் பஸ் நிலையம் அருகில் நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிரு‌‌ஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

சண்முகையா எம்.எல்.ஏ., மாவட்ட இளைஞர் அணி பொறுப்பாளர் ராமஜெயம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் சீனிவாசன், எஸ்.டி.பி.ஐ. கட்சி நகர செயலாளர் ஜாகீர் உசேன், காயல்பட்டினம் அனைத்து சமுதாய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது, மாவட்ட துணை செயலாளர் எஸ்.ஐ.காதர், நகர செயலாளர்கள் முருகபெருமாள் (ஆத்தூர்), முத்து முகமது (காயல்பட்டினம்) உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story