நீடாமங்கலம் அருகே மதுபாட்டில்கள் கடத்தி வந்த 7 பேர் கைது கார் பறிமுதல்
நீடாமங்கலம் அருகே மதுபாட்டில்கள் கடத்தி வந்த 7 பேரை போலீசார் கைது செய்ததுடன், காரையும் பறிமுதல் செய்தனர்.
நீடாமங்கலம்,
நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணி சோதனைச்சாவடி பகுதியில் வேகமாக வந்த ஒரு காரை போலீசார் மறித்து விசாரணை நடத்தினர்.
காரில் வந்த 7 பேரும் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனை செய்தனர். அப்போது காரில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் அடங்கிய 12 அட்டை பெட்டிகள் இருந்தன. அதில் 576 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
7 பேர் கைது
இதுகுறித்து நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் திருச்சி மாவட்டம், மணப்பாறையை சேர்ந்த பழனிக்குமார் (வயது 25), அதே ஊர் பாலாகுறிச்சியை சேர்ந்த நாகராஜ் (32) வருதகோன்பட்டியை சேர்ந்த பிச்சை (36), அம்மாபட்டியை சேர்ந்த ராமசாமி (41), பாரதிகுமார் (30), கொடும்பம்பட்டியை சேர்ந்த கிருஷ்ணன் (30), தேனூரை சேர்ந்த சிவா (25) ஆகிய 7 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து மதுபாட்டில்கள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Tags :
Next Story