குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம்
குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொள்ளிடம்,
குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே புத்தூர் அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் 150 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
பூம்புகார் அரசு கல்லூரி
இதேபோல் நேற்று முன் தினம் பூம்புகார் அரசு கல்லூரி முன்பு மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் 250 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு வந்தனா தலைமையில் பூம்புகார் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னை அபிராமி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story