மாவட்ட தலைமை அலுவலகங்களை நகர எல்லைக்குள் அமைக்க கோரி தென்காசியில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மாவட்ட தலைமை அலுவலகங்களை நகர எல்லைக்குள் அமைக்க கோரி தென்காசியில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Dec 2019 3:45 AM IST (Updated: 20 Dec 2019 12:19 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்ட தலைமை அலுவலகங்களை நகர எல்லைக்குள் அமைக்க கோரி தென்காசியில் நேற்று அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி,

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆகியவை தென்காசி அருகே உள்ள ஆயிரப்பேரியில் அமைய உள்ளதாக மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் அறிவித்து இருந்தார். இந்த அலுவலகங்களை தென்காசி நகர எல்லைக்குள் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தென்காசி புதிய பஸ்நிலையம் அருகே நேற்று அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். முகம்மது அபுபக்கர் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினர். முன்னாள் எம்.எல்.ஏ. ரசாக், தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் முத்துப்பாண்டி, மாவட்ட பொருளாளர் சேக் தாவூது, மாநில மாணவர் அணி இணை செயலாளர் ஷெரீப், விவசாய தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் கோமதிநாயகம், விவசாய அணி செயலாளர் சாமிதுரை, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் டேனி அருள்சிங், ம.தி.மு.க. நகர செயலாளர் வெங்கடேஸ்வரன், காங்கிரஸ் நகர தலைவர் காதர் மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story