குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Dec 2019 4:00 AM IST (Updated: 20 Dec 2019 12:59 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் மன்னார்குடியில் நடந்தது.

மன்னார்குடி,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சியினர், மாணவர்கள் உள்ளிட்ட பல அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் மன்னார்குடியில் ராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லூரி முன்பு அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திரளான கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக கோ‌‌ஷங்களை எழுப்பினர்.

Next Story