குடியுரிமை சட்ட திருத்தம் மூலம் நாட்டு மக்களுக்கு பா.ஜனதா துரோகம் செய்து விட்டது முத்தரசன் குற்றச்சாட்டு
குடியுரிமை சட்ட திருத்தம் மூலம் நாட்டு மக்களுக்கு பா.ஜனதா துரோகம் செய்து விட்டது என முத்தரசன் குற்றம் சாட்டி உள்ளார்.
கள்ளப்பெரம்பூர்,
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தஞ்சையை அடுத்த செங்கிப்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக செங்கிப்பட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட முத்தரசன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குடியுரிமை திருத்த சட்டத்தின் நோக்கம் இஸ்லாமியர்களை பிரித்து மதவாத கொள்கையை அமல்படுத்துவதாகும். அ.தி.மு.க. ஆட்சியை தக்க வைப்பதற்காக சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவு அளித்துள்ளது. இந்த சட்ட திருத்தத்தின் மூலம் நாட்டு மக்களுக்கு பா.ஜனதா துரோகம் செய்து விட்டது.
முழு பொறுப்பு
ரஜினி அமித்ஷாவுக்கு அறிவுரை சொல்லட்டும். அதை விடுத்து மாணவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாம். நாளை (திங்கட்கிழமை) குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தி.மு.க. கூட்டணி மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் சென்னையில் பேரணி நடைபெற உள்ளது.
இதற்கு போலீசார் அனுமதி மறுத்தால் அதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு எடப்பாடி பழனிசாமி அரசே முழுபொறுப்பாகும்.
முறைகேடுகள்
ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தல் ஆணையத்தின் உதவியோடு ஆளும் அ.தி.மு.க. உள்ளாட்சி தேர்தலில் முறைகேடுகள் செய்து வெற்றி பெற முயற்சித்து வருகிறது. இதனை முறியடித்து நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story