சேலத்தில் பயங்கரம் சொத்து தகராறில் உளியால் தாக்கி தந்தை கொலை; மகன் வெறிச்செயல்
சேலத்தில் சொத்து தகராறில் உளியால் தாக்கி தந்தையை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
சேலம்,
சேலம் அம்மாபேட்டையில் உள்ள நதிமூலம் மக்கான் தெருவை சேர்ந்தவர் ராமசாமி (வயது 55), தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயந்தி. இவர்களுடைய மகன்கள் சீனிவாசன்(32), ரஞ்சித்குமார், அருண் ஆகியோர் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். சீனிவாசன் ஆட்டோ மெக்கானிக் வேலை செய்து வருகிறார்.
குடும்ப பிரச்சினை காரணமாக ரஞ்சித்குமார், அருண் ஆகியோர் தாயார் ஜெயந்தியை பராமரித்து வருகின்றனர். சீனிவாசன் தந்தையை பராமரித்து வருகிறார். இதனிடையே சீனிவாசனிடம் அவருடைய மனைவி கோபித்துக்கொண்டு தனது மகன், மகளை அழைத்து கொண்டு பள்ளப்பட்டி பகுதியில் பெற்றோருடன் வசித்து வருகிறார். இதனால் சீனிவாசன் சரிவர வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு அங்கு சென்று தகராறு செய்து வந்துள்ளார்.
உளி, சுத்தியலால் தாக்கி கொலை
இந்தநிலையில், ராமசாமி தன்னுடைய குடும்ப சொத்துக்களை விற்று மகன்களுக்கு பணமாக வழங்கியுள்ளார். சீனிவாசன் அவர் தந்தை வசித்து வரும் வீட்டையும் தனக்கு மாற்றி கொடுக்க வேண்டும் அல்லது விற்று பணம் வழங்குமாறு தொந்தரவு செய்து வந்துள்ளார். இதன் காரணமாக தந்தை, மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் மாலை சீனிவாசன், ராமசாமி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் அவர்களுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.
அதன்பின்பு சீனிவாசன் அங்கிருந்து சென்று விட்டார். மீண்டும் இரவு 9.30 மணியளவில் அவர் வீட்டிற்கு வந்து தந்தையிடம் தகராறு செய்தார். இதில் ஆத்திரமடைந்த சீனிவாசன் வீட்டில் இருந்த உளியை எடுத்து தந்தை என்றும் பாராமல் கண்மூடித்தனமாக ராமசாமியின் முகத்தில் குத்தினார். மேலும் சுத்தியலால் அவரது தலையில் கடுமையாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த ராமசாமி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தந்தையை கொலை செய்த பின்பு சீனிவாசன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
கைது
இந்த சம்பவம் குறித்து சீனிவாசன், தம்பி அருணுக்கு போன் செய்து நான் தந்தையை கொலை செய்துவிட்டேன் என கூறினார். இதைக்கேட்ட அவர் தன்னுடைய அண்ணன் குடிபோதையில் உளறுவதாக நினைத்துவிட்டார். மீண்டும் சீனிவாசன், அருணுக்கு போன் செய்து நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதில் அவருக்கு உண்மை இருப்பது போல் தெரியவந்ததால் தந்தையை வந்து பார்த்தார். அங்கு படுகாயங்களுடன் ராமசாமி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அருண் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர்கள் ராமசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய சீனிவாசனை பிடித்து விசாரணை நடத்தி கைது செய்தனர். சேலத்தில் சொத்திற்காக தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story