சாரண ஆசிரியர்களுக்கு அடிப்படை பயிற்சி முகாம்
உடையார்பாளையம் மற்றும் செந்துறை கல்வி மாவட்டங்களை சேர்ந்த சாரண- சாரணிய பொறுப்பாசிரியர்களுக்கான அடிப்படை பயிற்சி முகாம் இலையூர் வாரியங்காவல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
ஜெயங்கொண்டம்,
உடையார்பாளையம் மற்றும் செந்துறை கல்வி மாவட்டங்களை சேர்ந்த சாரண- சாரணிய பொறுப்பாசிரியர்களுக்கான அடிப்படை பயிற்சி முகாம் இலையூர் வாரியங்காவல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் செல்வவிநாயகம் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் பொய்யாமொழி முன்னிலை வகித்தார். துணை ஆய்வாளர் இளங்கோவன் வரவேற்றார். முகாமில் சாரண இயக்க வரலாறு, சாரண உறுதிமொழி, சட்டம், கொடி ஏற்றும் முறை, பாடல்கள், படை கூட்டம் நடத்தும் முறை, வழிநடைப்பயணம் மேற்கொள்ளுதல், தலைமை பண்பு, கூடாரம் அமைத்தல், விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவது முதலியன குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமில் மாவட்ட கல்வி அலுவலர் சுந்தர்ராஜூ வாழ்த்தி பேசினார். இதில் சாரண- சாரணியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story