லாரி டிரைவரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு
லாரி டிரைவரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் டிரைவர்கள் மனு கொடுத்தனர்.
கிருஷ்ணகிரி,
தமிழ்நாடு அனைத்து லாரி டிரைவர்கள் அசோசியேசன் சார்பில், 15-க்கும் மேற்பட்ட மாவட்டத்தில் இருந்து வந்த லாரி டிரைவர்கள் மாநில தலைவர் முத்துகுமார், மாநில பொதுச்செயலாளர் தங்கபாண்டி ஆகியோர் தலைமையில் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதரிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
எங்கள் அசோசியேசன் உறுப்பினராக உள்ள அசோக் என்ற லாரி டிரைவர் ஓசூரில் இருந்து காரிமங்கலத்திற்கு சென்ற போது, கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் பணியில் இருந்த செண்பகவல்லி என்பவர் பாஸ்டேக்கில் பணம் இல்லை என்று கூறியுள்ளார். அசோக் ஏ.டி.எம். கார்டை கொடுத்து பணம் எடுத்துக் கொள்ள சொல்லியுள்ளார்.
தாக்குதல்
அசோக் பின் நம்பரை பதிவு செய்ய தாமதம் ஆனதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அதற்கு அந்த பெண் ஊழியர் கையில் வைத்திருந்த ஸ்வைப்பிங் மிசினால் அசோக்கை அடித்துள்ளார். இதில் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. செண்பகவல்லி மற்றும் அங்கிருந்த அடியாட்கள் அசோக்கை கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர்.
ஆனாலும் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்தில் வைத்து செண்பகவல்லியிடம் பொய்யான புகாரை பெற்றுக் கொண்டு அசோக்கை கைது செய்துள்ளனர். இந்த சுங்கச்சாவடியில் அடியாட்களை வைத்துக் கொண்டு ஓட்டுனர்களை கடுமையாக தாக்குவது, அநாகரிகமாக செயல்பட்டு பணம் வசூலிப்பது என அராஜகத்தில் ஈடுபடுகின்றனர்.
நடவடிக்கை
எனவே இதில் தொடர்புடைய நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, எங்களை போன்ற ஓட்டுனர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப் பட்டிருந்தது.
இதையொட்டி சேலம், தர்மபுரி, கரூர், தூத்துக்குடி, மதுரை உள்பட 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 200-க்கும் மேற்பட்ட டிரைவர்கள் வந்திருந்தனர். இதன் காரணமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story