ஏரல் அருகே கொலை செய்யப்பட்ட பெயிண்டர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும்; கலெக்டரிடம் மனு


ஏரல் அருகே கொலை செய்யப்பட்ட பெயிண்டர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும்; கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 22 Dec 2019 3:45 AM IST (Updated: 22 Dec 2019 3:03 AM IST)
t-max-icont-min-icon

ஏரல் அருகே கொலை செய்யப்பட்ட பெயிண்டரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சிறுத்தொண்டநல்லூரை சேர்ந்தவர் சாகுல்ஹமீது (வயது 43) பெயிண்டர். கடன் பிரச்சினையால் இவரை கடந்த 17-ந் தேதி சிலர் காரில் கடத்தி சென்று அடித்து உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சாகுல்ஹமீது தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனளிக்காமல் உயிர் இழந்தார். இது தொடர்பாக ஏரல் போலீசார் 2 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் சாகுல்ஹமீதுவின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் பலர் நேற்று காலையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தனர்.

அவர்கள், கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். கொலை செய்யப்பட்ட சாகுல்ஹமீது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அவரது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் மனு கொடுத்தனர். அதன் பின்னர் அவர்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.

Next Story