தேனி அருகே புதிதாக போடப்பட்டு 3 மாதத்தில் சேதம் அடைந்த தார்சாலை - விவசாயிகள் பரிதவிப்பு


தேனி அருகே புதிதாக போடப்பட்டு 3 மாதத்தில் சேதம் அடைந்த தார்சாலை - விவசாயிகள் பரிதவிப்பு
x
தினத்தந்தி 23 Dec 2019 3:30 AM IST (Updated: 23 Dec 2019 12:21 AM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே புதிதாக போடப்பட்ட தார்சாலை 3 மாதத்தில் சேதம் அடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.

தேனி,

தேனி அருகே பூதிப்புரம் பேரூராட்சி உள்ளது. பூதிப்புரத்தில் இருந்து மலையடிவாரத்தில் உள்ள சன்னாசியப்பன் கோவிலுக்கு செல்லும் சாலை சேதம் அடைந்து காணப்பட்டது. இந்த பகுதியில் அதிக அளவில் விவசாயம் நடந்து வருகிறது. விவசாயிகள் விளை பொருட்களை கொண்டு வரவும், விவசாய நிலங்களுக்கு இடுபொருட்களை கொண்டு செல்வதற்கும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

எனவே சேதம் அடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கடந்த 3 மாதத்துக்கு முன்பு இங்கு புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால், அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. தற்போது இந்த சாலை ஆங்காங்கே சேதம் அடைந்துள்ளது. சாலை அமைக்கப்பட்ட தடமே தெரியாத அளவுக்கு சில இடங்களில் உருக்குலைந்து காணப்படுகிறது. தற்போது இங்கு விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சாலை சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். எனவே, சாலை சேதம் அடைந்த இடங்களில் மீண்டும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
1 More update

Next Story