உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ.1 லட்சத்து 42 ஆயிரம் பறிமுதல் வாலிபரிடம் அதிகாரிகள் விசாரணை
ஒரத்தநாடு அருகே உரிய ஆவணங்கள் இல்லாததால் வாலிபர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இ்ந்த பணம் வாக்காளர்களின் வங்கி கணக்கில் செலுத்த எடுத்து செல்லப்பட்டதா? என்பது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒரத்தநாடு,
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒரத்தநாடு அருகே திருவோணம் அண்ணாசிலை பகுதியில் நேற்று காலை துணை தாசில்தார் செந்தில்குமார் தலைமையில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தங்கப்பா, ஏட்டு சரவணன் உள்ளிட்ட பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையம் அருகே ஒருவர் பணத்துடன் நின்று கொண்டிருந்தார்.
வங்கி கணக்கு எண்
இதனை பார்த்த பறக்கும் படை அதிகாரிகள் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருவோணத்தை அடுத்துள்ள வண்ணான்கொல்லை பட்டியை சேர்ந்த மகாலிங்கம் மகன் திருச்செல்வம் (வயது26) என்பதும், அவரிடம் ரூ.1 லட்சத்து 42 ஆயிரம் இருந்ததும் தெரியவந்தது. மேலும் சிலருடைய வங்கி கணக்கு எண்களை எழுதி வைத்திருந்த காகிதத்தையும் அவரிடம் இருந்து பறக்கும் படையினர் கைப்பற்றினர். இதுதொடர்பாக திருச்செல்வத்திடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணை
அப்போது பணம் வெளிநாட்டில் உள்ள ஒருவருக்கு சொந்தமானது என திருச்செல்வம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் உரிய ஆவணம் இல்லாததால் அதிகாரிகள் திருச்செல்வம் வைத்திருந்த ரூ. 1 லட்சத்து 42 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இது ஹவாலா பணமா? அல்லது வாக்காளர்களின் வங்கி கணக்கில் செலுத்துவதற்காக எடுத்து வரப்பட்ட பணமா? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story