கள்ளக்குறிச்சி அருகே புதுமாப்பிள்ளை, தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை
கள்ளக்குறிச்சி அருகே புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி அருகே மலைக்கோட்டாலம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 24). பெயிண்டர். அதே ஊரைச்சேர்ந்தவர் கவுசல்யா. இவர்கள் 2 பேரும் காதலித்து கடந்த 3-11-2019 அன்று திருமணம் செய்து கொண்டனர். கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் வேலைக்காக வெங்கடேசன் கோவைக்கு சென்றனர். இதனிடையே கவுசல்யா கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் வேலைக்கு சேர்ந்தார். இந்த நிலையில் கோவையில் இருந்து வெங்கடேசன் சொந்தஊருக்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த கவுசல்யா வேலைக்கு புறப்பட்டார். அவரை வேலைக்கு செல்லக்கூடாது என கூறி வெங்கடேசன் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனமுடைந்த வெங்கடேசன் வீட்டுக்குள் சென்று தூக்குப்போட்டு கொண்டார்.
போலீசார் விசாரணை
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வெங்கடேசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 1½ மாதத்தில் பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story