காட்டுமன்னார்கோவிலில் தனியார் நிதி நிறுவன மேலாளர் மர்ம சாவு போலீசார் விசாரணை
காட்டுமன்னார்கோவில் தனியார் நிதி நிறுவன மேலாளர் மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்டுமன்னார்கோவில்,
காட்டுமன்னார்கோவில் உடையார்குடி பெரியார் நகரை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் சதீஷ்நாதன்(வயது 34). இவர் சேத்தியாத்தோப்பில் உள்ள தனியார் நிதிநிறுவனத்தில் கிளை மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு சுதா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் சதீஷ்நாதன் நேற்று முன்தினம் அலுவலக வேலை சம்பந்தமாக புதுச்சேரி சென்றார். பின்னர் அங்கிருந்து மாலையில் ஒரு காரில் வீடு திரும்பினார். காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனை அருகே வந்தபோது, திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சதீஷ்நாதனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சாவில் சந்தேகம்
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் மருத்துவமனை முன்பு திரண்டனர். இதுகுறித்து அவருடைய மனைவி சுதா காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதில் தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சதீஷ்நாதன் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story