10 மற்றும் 12-ம் வகுப்பு அரையாண்டு தேர்வில், முன்கூட்டியே கேள்வித்தாள் வெளியானது குறித்து விசாரணை
‘10 மற்றும் 12-ம் வகுப்பு அரையாண்டு தேர்வில் முன்கூட்டியே கேள்வித்தாள் வெளியானது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது' என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
நம்பியூர்,
நம்பியூரில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு தற்போது அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் சில வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்கூட்டியே வெளியானதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் குறுந்தகடு வடிவில் கேள்வித்தாள் அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் எப்படி, எங்கு வெளியானது என்று தெரியவில்லை. வெளியானதாக கூறப்பட்ட கேள்வித்தாள் மாற்றப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழக அரசு உள்ளாட்சிகளுக்குபல்வேறு வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. மத்திய அரசிடம் இருந்து உள்ளாட்சிகளுக்கு ரூ.6 ஆயிரம் கோடி நிதி வரவேண்டி உள்ளது. தேர்தல் முடிந்ததும் அந்த தொைக உள்ளாட்சிகளுக்கு வந்து சேரும்.
நிதி வந்ததும் அனைத்து கிராமங்களுக்கும் நலத்திட்ட பணிகள் விரைந்து நிறைவேற்றப்படும்.
இதேபோல் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு, திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் தம்பி என்கிற சுப்பிரமணியம் உடன் இருந்தார்.
Related Tags :
Next Story