பெத்தநாயக்கன்பாளையம் அருகே மயங்கி கிடந்த தி.மு.க. வேட்பாளர் கொலை முயற்சியா? போலீசார் விசாரணை
பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும்தி.மு.க.வேட்பாளர் ஒருவர் வாயில் நுரைதள்ளிய படி மயங்கி கிடந்தார். அவரை யாரேனும் கொலை செய்ய முயன்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெத்தநாயக்கன்பாளையம்,
பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள கருமந்துறையை சேர்ந்தவர் அண்ணாமலை. தி.மு.க.வை சேர்ந்த இவர் உள்ளாட்சி தேர்தலில் பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய 5-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
நேற்று இரவு வீட்டை விட்டு வெளியில் சென்றவர் வெகு நேரம் ஆகியும் திரும்பவில்லை. உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடிய போது வீட்டின் அருகே உள்ள கோவில் பின்பகுதியில் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார்.
அவரை மீட்டு சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்த போது அவரது உடலில் விஷம் கலந்து இருப்பது தெரிய வந்தது. இதையொட்டி அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொலை முயற்சி ? போலீசார் விசாரணை
இது குறித்து கரியகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரசியல் போட்டியில் அண்ணாமலையை கொலை செய்யும் நோக்கில் அவருக்கு யாராவது விஷம் கொடுத்தார்களா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story