மதுரை மகபூப்பாளையத்தில், குடியுரிமை திருத்த மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்;கடையடைப்பு


மதுரை மகபூப்பாளையத்தில், குடியுரிமை திருத்த மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்;கடையடைப்பு
x
தினத்தந்தி 23 Dec 2019 10:15 PM GMT (Updated: 23 Dec 2019 11:48 PM GMT)

மதுரை மகபூப்பாளையத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டமும் கடையடைப்பும் நடத்தப்பட்டது.

மதுரை,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை மகபூப்பாளையம் ஜமாத் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஜின்னா திடலில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஜமாத் தலைவர் நிஜாம் அலி தலைமை தாங்கினார்.

அப்போது, பா.ஜ.க.வுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்தும் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பேசினர்.

இதி்ல், மனிதநேய மக்கள் கட்சியின் முகமது கவுஸ், ஷேக் இப்ராகிம், மீ.த.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அந்த பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் நேற்று அடைக்கப்பட்டிருந்தன. இதனால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story