நன்மங்கலத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா


நன்மங்கலத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா
x
தினத்தந்தி 24 Dec 2019 10:45 PM GMT (Updated: 24 Dec 2019 3:02 PM GMT)

தாம்பரத்தை அடுத்த நன்மங்கலத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.

வண்டலூர், 

தாம்பரத்தை அடுத்த நன்மங்கலத்தில் வீரமங்கள ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், வடை மாலை, அர்ச்சனை நடைபெறுகிறது. வருகிற 1–ந் தேதி ஆங்கில புத்தாண்டு விழா மற்றும் 6–ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வருகிற 6–ந் தேதி வரை காலை 8 மணிக்கும் மாலை 6 மணிக்கும் லட்சார்ச்சனை விழா நடைபெறுகிறது.

Next Story