தர்மபுரி,ஓசூரில் எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுசரிப்பு சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி
தர்மபுரி,ஓசூரில் எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
தர்மபுரி,
தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. நிறுவன தலைவருமான எம்.ஜி.ஆர். நினைவு தினம் தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவருடைய உருவ சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். சிலைகள் இல்லாத ஊர்களில் அவருடைய உருவப்படத்திற்கு அந்த பகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தர்மபுரி மாவட்ட கட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாவட்ட செயலாளரும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். இதில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ. ஏ.கோவிந்தசாமி, அ.தி.மு.க. விவசாய பிரிவு மாநில தலைவர் டி.ஆர்.அன்பழகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், முன்னாள் எம்.எல்.ஏ. கே.சிங்காரம், இளைஞர் பாசறை மாநில இணை செயலாளர் கே.பி.ஆனந்த், நகர செயலாளர் குருநாதன், மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பூக்கடை ரவி, ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், பெரியண்ணன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிசாமி, நிர்வாகிகள் பரமசிவம், சுப்பிரமணியன், அங்குராஜ், நகர துணை செயலாளர் அறிவாளி, மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் பொன்னுவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அ.ம.மு.க.
தர்மபுரி மாவட்ட அ.ம.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி பழைய தர்மபுரியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாவட்ட செயலாளர் டி.கே.ராஜேந்திரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் ஆர்.பாலு, நகர செயலாளர் மணிவண்ணன், ஒன்றிய செயலாளர் பாஸ்கர், மாவட்ட நிர்வாகிகள் வேலாயுதம், குமரேசன், ராஜா, கோகுல், நஞ்சன், மாவட்ட இணை செயலாளர் சாந்தரூபி மற்றும் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.
ஓசூர்
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நினைவு தினம் நேற்று ஓசூரில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, ஓசூர் ராயக்கோட்டை சர்க்கிளில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு, மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி, ஓசூர் நகர அ.தி.மு.க. செயலாளர் எஸ்.நாராயணன் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். இதில் மாவட்ட பொருளாளர் கே.நாராயணன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜே.எம்.சீனிவாசன், கூட்டுறவு வங்கி தலைவர் எம்.நடராஜன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் அரப்ஜான், ஓசூர் நகர துணை செயலாளர் கே.மதன், நகர பொருளாளர் கே.என்.குமார், மாவட்ட பிரதிநிதி விஜயாலயன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story