எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 24 Dec 2019 10:30 PM GMT (Updated: 24 Dec 2019 10:25 PM GMT)

எம்.ஜி.ஆரின் நினைவு நாளை முன்னிட்டு புதுச்சேரியில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

புதுச்சேரி,

எம்.ஜி.ஆரின் நினைவு நாள் புதுவை அரசு சார்பில் நேற்று கடைபிடிக்கப்பட்டது. அதையொட்டி புதுவை புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள எம்.ஜி.ஆர். சிலை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

சிலைக்கு சபாநாயகர் சிவக்கொழுந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அ.தி.மு.க.

அ.தி.மு.க.வினர் உப்பளத்தில் உள்ள தலைமை கழகத்தில் இருந்து அமைதி ஊர்வலமாக வந்து எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ., வையாபுரிமணிகண்டன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஓம்சக்தி சேகர், நடராஜன், ராஜாராமன், துணை செயலாளர் கணேசன், இணை செயலாளர்கள் திருநாவுக்கரசு, காசிநாதன், மகாதேவி, பன்னீர்செல்வி, நாகமணி, அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, உழவர்கரை நகர செயலாளர் அன்பானந்தம் மற்றும் நிர்வாகிகள் வெங்கடசாமி, கோவிந்தம்மாள், குணசேகரன், வக்கீல் ராமலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அ.ம.மு.க.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் அமைதி ஊர்வலமாக வந்து எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தனர். சுதேசி மில் அருகே இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்துக்கு மாநில செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அருள் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. யூ.சி.ஆறுமுகம், நிர்வாகிகள் எஸ்.டி.சேகர், தமிழ்ச்செல்வம், பாஸ்கர், சுகுணா செல்லப்பன், சுப்ர மணியன், வீரப்பன், ஆனந்தன், சிலம்பரசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தே.மு.தி.க.

இதேபோல் தே.மு.தி.க. வினர் மாநில செயலாளர் வி.பி.பி.வேலு தலைமையில் ஊர்வலமாக வந்து எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். புதிய நீதிக்கட்சியினர் மாநில தலைவர் பொன்னுரங்கம் தலைமையிலும், புதுவை மாநில முஸ்லிம் லீக் (சி.ஏ.கபூர்) கட்சியினர் மாநில தலைவர் முகமது மூசா தலைமையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

காக்காயந்தோப்பில் மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் மாசிலா குப்புசாமி தலைமையில் எம்.ஜி.ஆர். படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தொகுதி அவைத்தலைவர் நடராஜன், முன்னாள் அவைத்தலைவர் குமரன், நிர்வாகிகள் சரவணன், சுப்புராயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

வி்ல்லியனூர்

வில்லியனர் பைபாஸ் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முன்னாள் எம்.எல்.ஏ. நடராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த சிலையை அகற்ற முயற்சிகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக நடராஜன் கூறும்போது, சிலையை இந்த இடத்தில் இருந்து அகற்ற தேவையில்லை. அப்படி அவசியம் வரும்பட்சத்தில் அங்கு ரவுண்டானா அமைக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

எம்.ஜி.ஆர். அறக்கட்டளை

பாரத ரத்னா எம்.ஜி.ஆர். அறக்கட்டளை சார்பில் தலைவர் பொன்.கைலாசநாதன் தலைமையில் மணவெளி, அரியாங்குப்பம் தொகுதிகளில் எம்.ஜி.ஆர். படம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் துணைத்தலைவர் பரசுராமன், செயலாளர் பன்னீர்செல்வம், துணை செயலாளர்கள் உதயகுமார், பாஸ்கர், பொருளாளர் வாழுமுனி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தவளக்குப்பத்தில்

மணவெளி தொகுதி அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களின் 32-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அதையொட்டி தவளகுப்பம் நான்குமுனை சந்திப்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். உருவப் படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு மணவெளி தொகுதி அ.தி.மு.க. பிரமுகர் குமுதன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. ராஜாராமன் மணவெளி தொகுதி செயலாளர் மூர்த்தி அவைத்தலைவர் சிவராம ராஜா மாநில மற்றும் தொகுதி அ.தி.மு.க. பிரமுகர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story