காஞ்சீபுரத்தில் மேலும் 21 ரவுடிகள் கைது


காஞ்சீபுரத்தில் மேலும் 21 ரவுடிகள் கைது
x
தினத்தந்தி 26 Dec 2019 3:45 AM IST (Updated: 26 Dec 2019 1:10 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் மேலும் 21 ரவுடிகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

காஞ்சீபுரம், 

தமிழக போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி அதிரடி உத்தரவின் பேரில், காஞ்சீபுரத்தில் 6 தனி போலீஸ் படைகள் அமைக்கப்பட்டு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடிகளை களையெடுக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. மறைந்த ரவுடி ஸ்ரீதரின் டிரைவர் தினேஷ், மைத்துனர் தணிகா, பொய்யாகுளம் தியாகு, ஆகியோரின் நண்பர்களை தொடர்ச்சியாக தனிப்படை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

கடந்த 23-ந்தேதி 15 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் 12 ரவுடிகளையும், நேற்று தினேஷ், தியாகு, தணிகா ஆகியோரின் நண்பர்களான சிலம்பு என்கிற சிலம்பரசன் (வயது 27), கோகுல் என்ற ஜாய்மோகன் (25), ராமு (34), அரவிந்தன் என்ற டைகர் அரவிந்தன் (22) உள்பட 9 ரவுடிகளையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும், தனிப்படை போலீசார் ரவுடிகளை பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Next Story