முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே குறித்து அம்ருதா பட்னாவிஸ் மீண்டும் விமா்சனம்


முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே குறித்து அம்ருதா பட்னாவிஸ் மீண்டும் விமா்சனம்
x
தினத்தந்தி 30 Dec 2019 5:00 AM IST (Updated: 30 Dec 2019 4:09 AM IST)
t-max-icont-min-icon

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை விமர்சித்து அம்ருதா பட்னாவிஸ் மீண்டும் டுவிட்டரில் கருத்து தெரிவித்து உள்ளார்.

மும்பை, 

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை விமர்சித்து அம்ருதா பட்னாவிஸ் மீண்டும் டுவிட்டரில் கருத்து தெரிவித்து உள்ளார்.

டுவிட்டரில் விமா்சனம்

முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா. ஆக்சிஸ் வங்கியில் உயர் பதவியில் இருக்கும் இவர் டுவிட்டரில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை கடுமையாக விமர்சித்து வருகிறார். முதலில் அவர் அவுரங்காபாத்தில் பால்தாக்கரே நினைவிடத்திற்காக மரங்கள் வெட்டப்படுவதாக முதல்-மந்திரியை விமர்சித்து இருந்தார்.

அதன்பிறகு தாக்கரே என பெயர் வைத்திருப்பவர்கள் எல்லோரும் பால் தாக்கரே ஆகி விட முடியாது என உத்தவ் தாக்கரேயை விமர்சித்து இருந்தார். அதற்கு சிவசேனா பெண் தலைவர் பிரியங்கா சதுர்வேதி டுவிட்டரில் அம்ருதாவிற்கு பதிலடி கொடுத்து இருந்தார். மேலும் பல இடங்களில் சிவசேனா மகளிர் அணியினர் அம்ருதாவை கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அந்த போராட்டங்களை தூண்டி விட்டதாகவும் அம்ருதா, முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை விமர்சித்தார்.

தவறான தலைவர்

இந்தநிலையில் தானே மாநகராட்சி ஊழியர்களின் சம்பள கணக்கு, தனியார் வங்கியில் இருந்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு மாற்றப்பட்டது. மேலும் போலீசாரின் சம்பள கணக்கையும், தனியார் வங்கியில் இருந்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு மாற்ற மாநில அரசு பரிசீலித்து வருகிறது.

இந்தநிலையில், அம்ருதா முதல்-மந்திரியை விமர்சித்து மீண்டும் டுவிட்டரில் கருத்து தெரிவித்து உள்ளார்.

அதில் அவர், ‘‘தவறான ஒரு தலைவரை பெற்று இருப்பது மராட்டியத்தின் தவறு அல்ல, ஆனால் அவருடன் இருப்பது தவறு. விழித்து கொள் மராட்டியமே’’ என கூறியுள்ளார்.

பேட்டி

வங்கி கணக்குகள் மாற்றம் குறித்து அம்ருதா பட்னாவிஸ் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே அரசு ஊழியர்கள் வங்கி கணக்குகள் ஆக்சிஸ் வங்கியில் திறக்கப்பட்டுள்ளன. தனியார் வங்கிகளும் இந்திய வங்கிகள் தான். அரசு நியாயமான முறையில் சிந்திக்க வேண்டும். அரசு ஊழியர்களின் வங்கி கணக்குகள் மாற்றப்படுவதன் மூலம் அரசு என்னையும், எனது கணவரையும் பழிவாங்க முயற்சி செய்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story