மாவட்ட செய்திகள்

கத்திரிப்பட்டியில் 2 வாக்குச்சாவடிகளில் மறு ஓட்டுப்பதிவு + "||" + Re-voting in 2 polling booths

கத்திரிப்பட்டியில் 2 வாக்குச்சாவடிகளில் மறு ஓட்டுப்பதிவு

கத்திரிப்பட்டியில் 2 வாக்குச்சாவடிகளில் மறு ஓட்டுப்பதிவு
அரூர் ஒன்றியம் கத்திரிப்பட்டியில் 2 வாக்குச்சாவடிகளில் நேற்று மறு ஓட்டுப்பதிவு நடைபெற்றது.
அரூர்,

தர்மபுரி மாவட்டம் அரூர் ஊராட்சி ஒன்றியம், சிட்லிங் ஊராட்சிக்குட்பட்டது கத்திரிப்பட்டி கிராமம். இந்த ஊரில் 452 பெண்கள் உள்பட 970 வாக்காளர்கள் உள்ளனர். இந்த ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 9 பேர் போட்டியிடுகின்றனர். இதற்கான முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 27-ந்தேதி நடந்தது.


அப்போது கத்திரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 2 வாக்குச்சாவடிகளில் வாக்குச்சீட்டில் 9 வேட்பாளர்களுக்கு பதிலாக வேறு ஊராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் 5 வேட்பாளர்களின் சின்னங்கள் மாறி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கத்திரிப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. மேலும் இந்த வாக்குச்சாவடியிலும் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் அன்று மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி அறிவித்தார்.

மறு ஓட்டுப்பதிவு

இந்தநிலையில் கத்திரிப்பட்டி வாக்குச்சாவடியில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மறு ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குச்சாவடியில் கம்பாலை, நாட்டான்வலவு, நடுவலவு, கத்திரிப்பட்டி ஆகிய மலைக்கிராமங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை நீண்ட வரிசையில் காத்திருந்து பதிவு செய்தனர்.

இதனிடையே நேற்று நடைபெற்ற மறு ஓட்டுப்பதிவின் முடிவில் 2 வாக்குச்சாவடிகளிலும் மொத்தம் 779 வாக்குகள் பதிவாகின. கத்திரிப்பட்டி வாக்குச்சாவடியில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. செங்கல்பட்டில் இருந்து ராஜஸ்தானுக்கு லாரியில் சென்ற 53 தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தம் அரக்கோணத்தில் பரபரப்பு
செங்கல்பட்டில் இருந்து லாரியில் ராஜஸ்தானை நோக்கி சென்ற வடமாநில கூலித்தொழிலாளர்கள் 53 பேர் அரக்கோணத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர் அதே லாரியில் அழைத்துச் செல்லப்பட்டு மாவட்ட எல்லையில் விடப்பட்டனர்.
2. கொரோனா வைரஸ் எதிரொலி; சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை வரும் 31ந்தேதி வரை நிறுத்தம்
கொரோனா வைரஸ் எதிரொலியாக சென்னையில் வருகிற 31ந்தேதி வரை மெட்ரோ ரெயில் சேவை முழுவதும் நிறுத்தப்படுகிறது.
3. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரேஷன்கடை பணியாளர்கள் வேலை நிறுத்தம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரேஷன்கடை பணியாளர்கள் நேற்று வேலை நிறுத்தம் செய்தனர்.
4. சீனர்களுக்கு ‘விசா’ வழங்குவது நிறுத்தம்: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
சீனாவில் இருந்து 28 தமிழர்கள் உள்பட மேலும் 323 பேர் நேற்று டெல்லி அழைத்துவரப்பட்டனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, சீனர்களுக்கு இ-விசா வழங்குவதை மத்திய அரசு நிறுத்திவைத்து உள்ளது.