சுசீந்திரம் அருகே, கடன் தொல்லையால் பெண் தற்கொலை


சுசீந்திரம் அருகே, கடன் தொல்லையால் பெண் தற்கொலை
x
தினத்தந்தி 4 Jan 2020 4:00 AM IST (Updated: 3 Jan 2020 11:40 PM IST)
t-max-icont-min-icon

சுசீந்திரம் அருகே கடன் தொல்லையால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

மேலகிருஷ்ணன்புதூர்,

சுசீந்திரம் அருகே பள்ளம் சுனாமி காலனியை சேர்ந்தவர் பேஸிலி ஆன்றோ. இவருடைய மனைவி பாத்திமா மேரி  (வயது 36). இவர்கள் அந்தபகுதியில் புதிதாக வீடு கட்டினார்கள். இதற்காக பாத்திமா மேரி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் பணம் கடன் வாங்கி இருந்தார். பின்னர் பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் அவர் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் திரும்ப கேட்டு தொல்லை கொடுத்தனர். இதனால், கடந்த சில நாட்களாக அவர் மனமுடைந்்த நிலையில் காணப்பட்டார்.

சம்பவத்தன்று பாத்திமா மேரி வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாத்திமா மேரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
1 More update

Next Story