புஞ்சைபுளியம்பட்டி அருகே, கல்லூரி பஸ்-மோட்டார்சைக்கிள் மோதல்; வாலிபர் சாவு


புஞ்சைபுளியம்பட்டி அருகே, கல்லூரி பஸ்-மோட்டார்சைக்கிள் மோதல்; வாலிபர் சாவு
x
தினத்தந்தி 4 Jan 2020 4:30 AM IST (Updated: 3 Jan 2020 11:40 PM IST)
t-max-icont-min-icon

புஞ்சைபுளியம்பட்டி அருகே கல்லூாி பஸ்- மோட்டார்சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

புஞ்சைபுளியம்பட்டி,

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள கோப்பம்பாளையம் கே.வி.கே. காலனியை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகன் தர்மன் (வயது 24). சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று காலை தர்மன் மோட்டார்சைக்கிளில் கோப்பம்பாளையத்தில் இருந்து புளியம்பட்டிக்கு சென்றுகொண்டு இருந்தார். அணையப்பாளையம் என்ற இடத்தில் சென்றபோது,எதிரே மாணவிகளை ஏற்றிக்கொண்டு கோபியில் செயல்படும் ஒரு தனியார் கல்லூரி பஸ் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் பஸ்சும், மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட தர்மன் படுகாயம் ்அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தர்மனின் உடலை கைப்பற்றி பிேரத பரிசோதனைக்காக சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்தில் இறந்த தர்மனுக்கு திருமணம் ஆகவில்லை. அவருடைய உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
1 More update

Next Story