மீஞ்சூர் ஒன்றியத்தில் பூச்சி தாக்கி நெல் பயிர் பாதிப்பு உரிய நடவடிக்கை எடுக்க - விவசாயிகள் கோரிக்கை
மீஞ்சூர் ஒன்றியத்தில் பூச்சி தாக்கி நெல் பயிர் பாதிப்புக்குள்ளானது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீஞ்சூர்,
மீஞ்சூர் ஒன்றியத்தில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இங்குள்ள மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். சம்பா பருவத்தில் 20 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் நெல் பயிர் நடவு செய்யப்பட்டது. நெல் பயிர் நன்கு வளர்ந்து கதிர் பிடிக்கும் நேரத்தில் புகையான் பூச்சி தாக்குதலுக்குள்ளானது.
தேவம்பட்டு, கோளுர், மெதூர், பெரும்பேடு, கம்மவார்பாளையம், காட்டூர், தத்தைமஞ்சி உட்பட பல்வேறு கிராமங்களில் 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்கள் பாதிப்புக்குள்ளானது.
விவசாயிகள் கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன், நகைக்கடன் பெற்று ஏக்கர் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் வரை செலவு செய்தனர். பூச்சி தாக்கி நெல் பயிர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளதால் வாங்கிய கடன்களை விவசாயிகள் திரும்ப செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்படுட்டுள்ளது.
நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்து வேளாண்மை துறையினர், மாவட்ட நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story