மாவட்ட செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது + "||" + Water shortage for Mettur Dam

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
மேட்டூர், 

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு கடந்த வாரம் நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 800 கனஅடிக்கு மேல் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்தானது கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.

கடந்த 30-ந்தேதி நீர்வரத்து 2 ஆயிரத்து 100 கனஅடியாக குறைந்தது. நேற்று முன்தினம் மேலும் குறைந்து வினாடிக்கு 1,526 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இது நேற்று மேலும் குறைந்து வினாடிக்கு 1075 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதமும், கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 600 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் தண்ணீரின் அளவை விட அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு மிகவும் அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் மளமளவென குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 1-ந்தேதி அணையின் நீர்மட்டம் 118.63 அடியாகவும், 2-ந்தேதி நீர்மட்டம் 118.14 அடியாகவும், நேற்று முன்தினம் அணை நீர்மட்டம் 117 அடியாகவும் இருந்தது. நேற்று நீர்மட்டம் 116.52 அடியாக குறைந்தது.

மேட்டூர் அணை கடந்த ஆண்டு 4 முறை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. தற்போது அணை நீர்மட்டம் 120 அடிக்கு கீழ் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தம்
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது நேற்று மாலை முதல் நிறுத்தப்பட்டது.
2. மேட்டூர் அணை நிலவரம்; நீர்வரத்து குறைந்தது
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு குறைந்துள்ளது.
3. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 10,600 கன அடி நீர்திறப்பு
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
4. மேட்டூர் அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்
மேட்டூர் அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
5. மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிய தொடங்கியுள்ளது.