தூத்துக்குடி அருகே அதிசயம்: ஆட்டுக்குட்டிகளுக்கு பால்கொடுக்கும் நாய்


தூத்துக்குடி அருகே அதிசயம்: ஆட்டுக்குட்டிகளுக்கு பால்கொடுக்கும் நாய்
x
தினத்தந்தி 5 Jan 2020 10:30 PM GMT (Updated: 2020-01-06T00:57:38+05:30)

தூத்துக்குடி அருகே ஆட்டுக்குட்டிகளுக்கு பால் கொடுக்கும் நாயின் பாசம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி அருகே உள்ள புதூர்பாண்டியாபுரத்தை சேர்ந்தவர் அண்ணாமலை(வயது 52). மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவர் வீட்டில் ஆடுகளும் வளர்த்து வருகிறார். இவர் சமீபத்தில் 6 செம்மறி ஆட்டுக்குட்டிகளை வாங்கி வளர்த்து வந்தார். இந்த ஆட்டுக்குட்டிகளுக்கு மாட்டுப்பாலை ஊற்றி வளர்த்து வந்தார். இந்த நிலையில் அவர் வீட்டில் வளர்ந்த ஒரு நாய் குட்டி போட்டது. அந்த குட்டிகள் இறந்து விட்டன.

இதனால் அந்த நாய், அங்கு இருந்த செம்மறி ஆட்டுக் குட்டிகளுக்கு பால் கொடுக்க தொடங்கியது. அந்த ஆட்டுக்குட்டிகளும் நாயிடம் விரும்பி பால் குடிக்க தொடங்கின. ஒரு மாதமாக அந்த நாய், ஆட்டுக்குட்டிகளை தனது குட்டிகள் போன்று கவனித்து வருகிறது. எப்போது, ஆட்டுக்குட்டிகளுடன் சுற்றி வருவது, பால் கொடுப்பதுமாக உள்ளது. இதனை அனைவரும் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.

இது குறித்து அண்ணாதுரை கூறும் போது, எனது வீட்டில் உள்ள நாய், நான் வளர்ப்பதற்காக வாங்கி வந்த செம்மறி ஆட்டுக் குட்டிகளுக்கு கடந்த ஒரு மாதமாக பால் கொடுத்துக் கொண்டு இருக்கின்றது. இந்த நாயும், ஆட்டுக்குட்டிகளும் தாயும், குட்டிகளும் போன்று சேர்ந்தே சுற்றி வருகின்றன. இரவில் ஆட்டுக்குட்டிகளை அடைக்கும் இடத்தின் அருகேயே அந்த நாயும் படுத்துக் கொள்ளும். இந்த நாய், ஆட்டுக்குட்டிகளின் பாசத்தை அக்கம்பக்கத்தினர் ஆர்வமாக பார்த்து செல்கின்றனர்’ என்று கூறினார்.

Next Story