வடமதுரை அருகே, சாமி சிலை உடைப்பு; வாலிபர் கைது


வடமதுரை அருகே, சாமி சிலை உடைப்பு; வாலிபர் கைது
x
தினத்தந்தி 5 Jan 2020 10:15 PM GMT (Updated: 2020-01-06T02:14:49+05:30)

வடமதுரை அருகே சாமி சிலையை உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

வடமதுரை,

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள மோளப்பாடியூரில் கருப்பணசாமி கோவில் உள்ளது. இதில் பட்டாளம்மன், பைரவர், கன்னிமார், மதுரைவீரன் உள்ளிட்ட சாமி சிலைகள் உள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவிலில் இருந்த மதுரைவீரன், பைரவர் சிலைகளை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தினர். இதுகுறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தசூழ்நிலையில் நேற்று முன்தினம் கோவிலுக்குள் புகுந்த வாலிபர் ஒருவர், தான் வைத்திருந்த அரிவாளால் கருப்பணசாமி சிலையை உடைத்து சேதப்படுத்தினார். இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் அவரை மடக்கிப்பிடித்து வடமதுரை போலீஸ் நி்லையத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் மோளப்பாடியூரை சேர்ந்த சதீஸ்குமார்(வயது 26) என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஸ்குமாரை கைது செய்தனர். மேலும் அவர் ஏன் கருப்பணசாமி சிலையை உடைத்தார்? என்றும், கோவிலில் இருந் த மற்ற சிலைகளையும் முன்பு அவர்தான் உடைத்து சேதப்படுத்தினாரா? என்றும் போ லீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வடமதுரை அருகே கோவில் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story