8-ந் தேதி அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள் பங்கேற்பு


8-ந் தேதி அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 6 Jan 2020 4:00 AM IST (Updated: 6 Jan 2020 2:19 AM IST)
t-max-icont-min-icon

8-ந் தேதி நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள் பங்கேற்க முடிவு செய்து, சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி,

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி பாலக்கரை சையது முர்துசா மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் அப்பாதுரை தலைமை தாங்கினார்.

மாநில தணிக்கையாளர் ஜெயராணி முன்னிலை வகித்தார். வரவு-செலவு அறிக்கைைய மாநில பொருளாளர் பிரகாசம் சமர்ப்பித்தார்.

வேலை நிறுத்த போராட்டம்

அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களையும், பட்டதாரி ஆசிரியராக உட்படுத்த வேண்டும். உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் அனைத்தும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 6-ந் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது. வருகிற 8-ந் தேதி நடைபெற உள்ள அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தில் சங்க உறுப்பினர்கள் திரளாக பங்கேற்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பொது செயலாளர் சங்கர், அமைப்பு செயலாளர் வெங்கட்ராமன், திருச்சி மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் உள்பட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story