பஸ் மோதியதால் மோட்டார்சைக்கிளில் கொண்டு சென்ற சிலிண்டர் பறந்து வந்து விழுந்ததில் தலை நசுங்கி சிறுவன் சாவு


பஸ் மோதியதால் மோட்டார்சைக்கிளில் கொண்டு சென்ற சிலிண்டர் பறந்து வந்து விழுந்ததில் தலை நசுங்கி சிறுவன் சாவு
x
தினத்தந்தி 7 Jan 2020 11:30 PM GMT (Updated: 8 Jan 2020 12:32 AM GMT)

பஸ் மோதியதால் மோட்டார்சைக்கிளில் கொண்டு சென்ற சிலிண்டர் பறந்து வந்து விழுந்ததில் தலை நசுங்கி சிறுவன் இறந்தார்.

புஞ்சைபுளியம்பட்டி, 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மேல்அகரம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவருடைய மனைவி சாரதா. இவர்களுடைய மகள் பத்மாவதி. மகன் அபினேஷ் (வயது 14). பாண்டியன் இறந்துவிட்டதால், சாரதா மகன், மகளுடன் திருப்பூர் மாவட்டம் தண்டுக்காரன்பாளையத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கிக்கொண்டு, அந்த பகுதியில் செயல்படும் தனியார் நூற்பாலையில் தொழிலாளியாக வேைல பார்த்து வருகிறார். அதே நூற்பாலையில் கடம்பூர் அருகே உள்ள காடகநல்லியை சேர்ந்த சிவக்குமார் (30) என்பவர் தொழிலாளியாக உள்ளார்.

இந்தநிலையில் சிவக்குமார் நேற்று அபினேஷை மோட்டார்சைக்கிளில் அழைத்துக்கொண்டு காடகநல்லிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து கியாஸ் சிலிண்டரை இருக்கையின் நடுவில் வைத்து, அதை அபினேஷை பிடித்துக்கொள்ள சொல்லி மோட்டார்சைக்கிளில் தண்டுக்காரன்பாளையத்துக்கு வந்துகொண்டு இருந்தார்.

புஞ்சைபுளியம்பட்டி புதுரோடு அருகே அவர்கள் சென்றபோது எதிரே கோவையில் இருந்து சத்தி நோக்கி ஒரு அரசு பஸ் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார்சைக்கிளும், பஸ்சும் பயங்கரமாக மோதிக்கொண்டன. அப்போது மோட்டார்சைக்கிளில் இருந்து சிவக்குமாரும், அபினேசும் ரோட்டில் விழுந்தார்கள். கியாஸ் சிலிண்டர் மேலே பறந்து சென்று தரையில் விழுந்து கிடந்த அபினேஷின் தலையில் விழுந்தது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். சிவக்குமார் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும், புஞ்சைபுளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அபினேஷின் உடலை கைப்பற்றி பிரேத பாிசோதனைக்காக சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்த அபிேனஷின் உடலை பார்த்து சிறுவனின் தாயும், அக்காளும் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

Next Story